யாரங்கே..
வாயிர்காவலோனே..
ஓ!
திறந்த நுழைவென்றெண்ணி வந்தாயோ பதரே??
வாழ்வளிப்போர்..பாவம்..
வஞ்சம் அறியார்..இனி அறியவும் மாட்டார்...
வளம் கொண்டோம்..
உளம் கொண்டோம்..
களம் கண்டோமாயின் புனல் வெல்வோம்!!!
செவிமழுங்கினாயோ..அறிவிலியே..
ஆள்வதிறை..
மாள்வதிரை...
பேடி முடிவெடுத்தாய்...
வீடு பேறு உனக்கேதினி??
விடுபெறுவாய்..வரம் கொள்..
வீடுபேறு வெல்வோனுக்கு!!!
என் சோதரனே..
வீணனல்லேன் யான்..
வருவேன் உனக்காக..
வழியில்மாண்டால் உனைச்சேர!!!
Thursday, November 27, 2008
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
literature kottikiddakku...
hats off...
is the theme based on R Raju's unscrupulous swindle?
Thanks Ram!!
That was a good take on Raju!! I had written this on 26/11 based on the Mumbai Terror attacks!!
Post a Comment