Tuesday, October 14, 2008

கார்முகில் காத‌லி!!

Completely illogical thoughts follow!!The coherence across the stanzas does spray 'love' in the air, only to be splashed in the end!! :)

வான்தோன்றிய‌ வ‌ல்லின‌ம் நீய‌டி;
ம‌‌ல‌ர்மாளும் மெல்லின‌ம் நீய‌டி;
இடையேயில்லா இடையின‌ம் நீய‌டி;

வான‌க‌ந்த‌னை த‌ரையாக்கினாய் நீய‌டி;
வைய‌க‌ம்த‌னை விண்ணொத்த‌வ‌ள் நீய‌டி;

இணையில்லா க‌ங்கையும் நீய‌டி;
அணையுள்ளே காவிரியும் நீய‌டி;

காத‌லின் நெருப்பைத் த‌ந்த‌வ‌ள் நீய‌டி;
காமனின் க‌ண‌லை வென்ற‌வ‌ள் நீய‌டி;

என்னுள‌த்தாம‌ரையின் த‌டாக‌ம் நீய‌டி;
என்னுட‌ல் தாளா தாண்ட‌வ‌ம் நீய‌டி;

ஆதியும் நீய‌டி;
ஆவியும் நீய‌டி;

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

பெய்யெ‌ன‌ப்பெய்திடும்
ம‌ழை!!!

PS: Political connotations to the verses on Cauvery, pretty intentional!!?? I stand amazed by this three pound thing called BRAIN!! :)

No comments: