Saturday, January 2, 2010

க‌ட‌ற்க‌ரைக் காத‌லி...

க‌ட‌ற்க‌ரை வாடைக் காற்று
குளிர் தாளாது
'விடைபெறுகிறேன்' என்றேன்...
அவ‌ளிட‌ம்

விடை அங்கே
பிறைப் புன்ன‌கை
'என்ன‌' என்றேன்
என்னைப் பிரிய‌ ம‌ன‌மற்ற‌வ‌ளுக்கு
மெள‌ன‌ம் பிரிய‌வும் ம‌ன‌மில்லை

இருகர‌ம் விரித்தாள்
'கொள்' என்றாள்
தொட்டுவிட‌ ம‌ன‌ம் த‌விக்க‌
தொட்டால் விட‌ நான் த‌விக்க‌
மார்புச் சூட்டில் முக‌ம் புதைத்தேன்

காத‌லின் போதைக்கு
கால‌மென்ன‌ விதிவில‌க்கா?
நொடிக‌ள் நாட்க‌ளாயின‌
...
...
...
பூஜை வேளையில் க‌ர‌டிக்கா ப‌ஞ்ச‌ம்
'சார் சுண்ட‌ல்'..
குற‌ல் கேட்டுப் ப‌தைத்தெழ‌
மீசையில் மண் க‌ண்டு
சிரித்தான் சுண்ட‌ல் பொடிய‌ன்!

க‌ட‌ற்க‌ரைத் த‌னிமையில் தேனீர் போதை!